உள்ளூர் செய்திகள்

சுந்தராபுரம் அருகே பள்ளி சுற்றுச்சுவரை ஆக்கிமித்துள்ள சுவரொட்டிகள்

Published On 2022-10-02 10:02 GMT   |   Update On 2022-10-02 10:02 GMT
  • பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிகம் பேர் படித்து வருகிறார்கள்.
  • மாணவர்களின் கவனத்தையும் திசை திருப்பும் வகையில் இது உள்ளது.

குனியமுத்தூர்

கோவை சுந்தராபுரம் சாரதாமில் ரோட்டில் செங்கோட்டையன் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிகம் பேர் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த பள்ளி சுவர் முழுவதும் சுவரொட்டிகள் ஓட்ட–ப்பட்டு, பள்ளிக்கூடமா? இல்லை சாதாரண கட்டிடமா? என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான அரசியல் கட்சி சுவரொட்டிகள், சினிமா சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இது அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

சமீபத்தில் கோவை கலெக்டர் சுவர்களில் சுவரொட்டி ஒட்டக்கூடாது என்று தெரிவித்து இருந்தார். அதன்படி சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்குப்பதிந்து நடவ–டிக்கையும் எடுக்கப்பட்டது.

ஆனால் தற்போது அந்த விதிமுறைகள் இருக்கிறதா? இல்லையா என்பது தெரியவில்லை. ஏனென்றால் மாநகரில் எங்கு பார்த்தாலும் சுவரொட்டியாகவே காணப்படுகிறது.

பாலத்தின் தூண்கள், சுவர்கள் என எல்லா இடங்களிலும் சுவரொட்டி ஒட்டி மாநகரின் அழகை குறைத்து வருகின்றனர். தூண்கள், சுவர்களில் ஒட்டியவர்கள் தற்போது பள்ளிக்கூட சுவர்களிலும் சுவரொட்டிகள் ஒட்ட ஆரம்பித்துள்ளனர்.

பள்ளிக்குள் கல்வி பயில நுழையும் மாணவர்கள், இத்தகைய சுவரொட்டிகளை காணும்போது அவர்களின் கவனம் படிப்பில் இருந்து சிதறகூடிய நிலை காணப்படுகிறது.

பாலக்காடு ரோடு குனியமுத்தூர் மெயின் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அப்பள்ளியின் சுற்று சுவரில் வர்ணம் தீட்டப்பட்டு திருக்குறள் எழுதப்பட்டு இருக்கிறது. அதை பார்த்துக் கொண்டு உள்ளே செல்லும் மாணவனுக்கு மனநிலை கல்வி பயில ஏற்றதாக அமைந்திருக்கும்.

ஆனால் கோவை சுந்தராபுரம் சாரதா மில் ரோட்டில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவரில் சுவரொட்டிகளை ஒட்டி பள்ளி சுவற்றின் அழகை குலைப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் கவன–த்தையும் திசைதிருப்பும் வகையில் இது உள்ளது.

எனவே கோவை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் போலீசார் இணைந்து, பள்ளி சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுத்து நிறுத்தி, ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குனியமுத்தூர் பள்ளியை போன்று அனைத்து பள்ளிகளும் தங்கள் சுற்றுச்சுவரில் திருக்குள் உள்ளிட்டவற்றை எழுதினால் மாணவர்களின் கல்விநிலை இன்னும் மேம்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News