உள்ளூர் செய்திகள்
கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொன்னேரி 21வது வார்டு பகுதி சபா கூட்டத்தில் கோரிக்கை
- தெருக்களில் சாலை அமைத்ததற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
- கூட்டத்தில் நகராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் பகுதி சபா கூட்டம் பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பொன்னேரி 21 வது வார்டில் பகுதி சபா கூட்டம் தனுஷா தமிழ் குடிமகன் தலைமையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் தெருக்களில் சாலை அமைத்ததற்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் வார்டுகளில் உள்ள பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்கவும் கழிவுநீர் வெளியேறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதிலளித்த கவுன்சிலர், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் பன்னீர், சுமதி, திவாகர் பாலு, சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.