உள்ளூர் செய்திகள்

பொதுமக்களுக்கு பொங்கல் பொருட்களை முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் வழங்கினார். அருகில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாணடியன்.

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பொங்கல் விழா - தனுஷ்கோடி ஆதித்தன் பங்கேற்பு

Published On 2023-01-13 09:29 GMT   |   Update On 2023-01-13 09:29 GMT
  • நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகம் முன்பு சமத்துவ பொங்கல் விழா இன்று நடைபெற்றது.
  • சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டார்.

நெல்லை:

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகம் முன்பு சமத்துவ பொங்கல் விழா இன்று நடைபெற்றது. விழாவுக்கு மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டார்.

தொடர்ந்து அலுவலகம் முன்பு பொங்கலிட்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட 100 பேருக்கு பொங்கல் பொருட்கள் மற்றும் முழு கரும்பு உள்ளிட்டவைகளை தனுஷ்கோடி ஆதித்தன் வழங்கினார்.

தாரை தப்பட்டை முழங்க கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்க குமார், பரணி இசக்கி, கவி பாண்டியன், உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் மணி, குறிச்சி கிருஷ்ணன் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News