உள்ளூர் செய்திகள்

பொங்கல் பண்டிகை: அரசு விரைவு பஸ்களில் இதுவரை 30 ஆயிரம் பேர் முன்பதிவு

Published On 2024-12-05 12:47 IST   |   Update On 2024-12-05 12:47:00 IST
  • முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • 11, 12, 13 தேதிகளில் சிறப்பு பஸ்கள் விடுவதற்கு அரசு ஏற்பாடு.

பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) வருவதையொட்டி ரெயில்களில் இடம் கிடைக்காதவர்கள் இப்போதே அரசு பஸ்களில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அரசு விரைவு பஸ்களில் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 30 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை யொட்டி 11, 12, 13 தேதிகளில் சிறப்பு பஸ்கள் விடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இருந்த போதிலும் பஸ்களில் முன்பதிவு செய்ய மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.

ஜனவரி மாதம் பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பாக இருக்கும் என்றும் குறைந்தப லட்சம் 1½ லட்சம் பேர் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News