உள்ளூர் செய்திகள்

திருட்டு சம்பவங்களை தடுக்க மாநகரில் போலீஸ் பாதுகாப்பு- ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு

Published On 2023-01-14 09:22 GMT   |   Update On 2023-01-14 09:22 GMT
  • கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்காக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • சாலை விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

நெல்லை":

டவுன் ரதவீதிகளில் இன்று மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்காக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

இதுதவிர மாநகர பகுதி முழுவதும் ஒலிப்பெருக்கிகள் கட்டப்பட்டு அதன்மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை வாசகங்கள் ஒலிக்கப்பட்டு கொண்டிருந்தன. மாநகரில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்கள் மூலமும் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது.

வண்ணார்பேட்டை, சந்திப்பு, எஸ்.என்.ஹைரோடு, சமாதானபுரம், ஐகிரவுண்டு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு சாலை விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்தபடி ஓட்டிய இளைஞர்களை பிடித்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News