உள்ளூர் செய்திகள்

பிளஸ்-1 தேர்வு முடிவுகளை ஆர்வமுடன் பார்வையிடும் மாணவிகளை படத்தில் காணலாம். 

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் கடலூர் மாவட்டத்தில் 88.74 பேர் தேர்ச்சி

Published On 2022-06-27 08:32 GMT   |   Update On 2022-06-27 08:32 GMT
  • பிளஸ்-1 தேர்வு முடிவுகள் கடலூர் மாவட்டத்தில் 88.74 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • கடலூர் மாவட்டத்தில் 72 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

கடலூர்:

கடலுார் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வினை105 அரசுப் பள்ளிகள், 11 அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், 29 அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 100 மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட மொத்தம் 245 பள்ளிகளிலிருந்து 15,834 மாணவர்கள், 15,740 மாணவிகள் உள்பட மொத்தம் 31574 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 13,146 மாணவர்களும், 14,874 மாணவிகளும் ஆக மொத்தம் 28,020 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தின் தேர்ச்சி சதவிகிதம் மாணவர்களுக்கு 83.02 சதவீதமும், மாணவிகளுக்கு 94.50 சதவீதமும் மொத்தத்தில் 88.74 சததவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர் கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் 82.84 சதவீதம் தேர்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 89.05 சதவீதமும், தேர்ச்சி பெற்றுள்ளன. மாநில அளவில் கடந்த ஆண்டில் (மார்ச் 2020ல்) கடை நிலையிலிருந்து உயர்வு பெற்று இந்த ஆண்டில் 22-வது நிலையை அடைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 72 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

Tags:    

Similar News