உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்ற காட்சி.




கீரனூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2022-07-01 06:54 GMT   |   Update On 2022-07-01 06:54 GMT
  • கீரனூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
  • இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பழனி:

பழனி அருகே கீரனூர் பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கீரனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில தூய்மை திட்டம் குறித்த கண்காட்சி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளிக்கூடத்தில் இருந்து தொடங்கியது. இந்த ஊர்வலத்தில் பேரூராட்சி தலைவர் கருப்புச்சாமி, செயல் அலுவலர் அன்னலட்சுமி, கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியைகள், தொண்டு அமைப்பினர், மகளிர் சுய உதவிக்குழுவினர், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து ெகாண்டனர்.

ஊர்வலத்தின் போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவதை தவிர்க்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக மஞ்சள்பை பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது.

Tags:    

Similar News