உள்ளூர் செய்திகள்

பேரணியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

ராதாபுரம் ஊராட்சி சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-06-04 14:48 IST   |   Update On 2023-06-04 14:48:00 IST
  • ஊராட்சி பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக்கை தடைசெய்தல் குறித்த சிறப்பு விழிப்புணர்வு பேரணி ராதாபுரம் ஊராட்சி மன்றம் சார்பில் நடைபெற்றது.
  • ஊராட்சிமன்ற அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி ஊரின் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகம் வந்தடைந்தது.

வள்ளியூர்:

ஊராட்சி பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக்கை தடைசெய்தல் குறித்த சிறப்பு விழிப்புணர்வு பேரணி ராதாபுரம் ஊராட்சி மன்றம் சார்பில் நடைபெற்றது. பேரணியை பொன் மீனாட்சி அரவிந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

ஊராட்சிமன்ற அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி ஊரின் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகம் வந்தடைந்தது. பேரணியின் போது வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடைசெய்ய வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் மற்றும் மஞ்சள் பை வழங்கப்பட்டது.

வருங்காலங்களில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவோர் மீது ஊராட்சி சட்டம் 1994-ன் படி அபராதம் விதிக்கப்படும் மற்றும் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

பேரணியில் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அரவிந்தன், ஊராட்சி துணை தலைவர் பலவேசம், வட்டார ஒருங்கிணைப்பாளர் இசைகுமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நவரோச் சுபாணந்தி, ஊராட்சி செயலர் மாரியப்பன், ஊர் பொதுமக்கள் மற்றும் தூய்மை காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News