உள்ளூர் செய்திகள்

இஸ்ரோ துணை இயக்குனர் எஸ்.வி.சர்மா, குத்து விளக்கேற்றிவிழாவை தொடங்கிவைத்த காட்சி.

ககன்யான் சாட்டிலைட்டை இந்த ஆண்டு விண்ணில் அனுப்ப திட்டம்-ஓசூரில் இஸ்ரோ துணை இயக்குனர் பேட்டி

Published On 2023-04-30 15:21 IST   |   Update On 2023-04-30 15:21:00 IST
  • மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் சாட்டிலைட் இந்த ஆண்டு விண்ணில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
  • மனிதர்கள் இல்லாத சேட்டிலைட்டிகளை விண்ணில் அனுப்பி சோதனை முயற்சிகள் மேற்கொண்ட பின்னர் மனிதனை வைத்து ககன்யான் சாட்டிலைட் விண்ணில் ஏவப்படும்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில், ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் . கல்வி மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் விளையாட்டு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, இஸ்ரோ துணை இயக்குனர் எஸ். வி. சர்மா கலந்து கொண்டு 57 மாணவ மாணவியர்களுக்கு, ஒரு கோடியே 4 லட்சத்து 97 ஆயிரத்து 950 ரூபாய் உதவி தொகைகளை வழங்கி விழாவில் பேசினார்.

அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: "சந்திராயன் -3 திட்டப்பணிகள் மேம்பட்ட நிலையில் உள்ளது. அது சம்பந்தமான தகவல்களை கொடுக்க துறையும் உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் சந்திராயன்-3 விண்ணில் ஏவுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான தேதி மற்றும் நேரம் ஆகியவை விரைவில் ஆன்லைனில் அறிவிக்கப்படும்.

இந்தியா சார்பில், முற்றிலும் நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட 117 சாட்டிலைட்டுகள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இஸ்ரோ சார்பில் வெளிநாடுகளுக்கு சொந்தமான 398 சாட்டிலைட்டுகள், பி.எஸ். எல்.வி ஏவுகணை வாகனம் மூலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. வணிகரீதியாக இந்த சேட்டிலைட்டுகள் இஸ்ரோ சார்பில் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இஸ்ரோவும் நாசாவும் இணைந்து என். ஐ. சார் என்ற சாட்டிலைட்டை தயாரித்து வருகிறது. இதுவும் மேம்பட்ட நிலையில் உள்ளது. இந்த சாட்டிலைட்டும் விண்ணில் ஏவப்படும் தகவல்கள் விரைவில் வெளியாகும் .

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் சாட்டிலைட் இந்த ஆண்டு விண்ணில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மனிதர்கள் இல்லாத சேட்டிலைட்டிகளை விண்ணில் அனுப்பி சோதனை முயற்சிகள் மேற்கொண்ட பின்னர் மனிதனை வைத்து ககன்யான் சாட்டிலைட் விண்ணில் ஏவப்படும், அது குறித்த தகவல்களும் விரைவில் இஸ்ரோ மூலம் வெளியாகும்". இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். பேட்டியின்போது, பள்ளியின் தாளாளர் அஸ்வத் நாராயணா, பள்ளி முதல்வர் சங்கீதா பல்லால் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News