உள்ளூர் செய்திகள்

கரடியை பிடிக்க வைக்கப்பட்டுள்ள கூண்டு.

களக்காடு அருகே ஊருக்குள் சுற்றி வரும் கரடியை பிடிக்க கூண்டு வைப்பு-வனத்துறையினர் கண்காணிப்பு

Published On 2023-05-06 09:17 GMT   |   Update On 2023-05-06 09:17 GMT
  • உணவு மற்றும் குடிநீருக்காக கரடி கிராமத்திற்குள் புகுந்து வருகிறது.
  • கோவிலின் அருகே கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.

களக்காடு:

களக்காடு வனப்பகுதியில் இருந்து வெளிவந்த கரடி மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல், பெருமாள்குளம் அருகே உள்ள பொத்தைகளில் தஞ்சமடைந்து உணவு மற்றும் குடிநீருக்காக கிராமத்திற்குள் புகுந்து வருகிறது.

கடந்த 2-ந் தேதி அதிகாலை அங்குள்ள இசக்கியம்மன் கோவிலில் கரடி உலா வந்த காட்சிகள் சி.சி.டி.வியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஊருக்குள் சுற்றி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைதொடர்ந்து களக்காடு வனத்துறையினர் கரடி நடமாட்டம் காணப்படும் பெருமாள்குளத்தில் ஆய்வு செய்தனர். அங்கு பதிந்திருந்த கரடியின் கால்தடங்களையும் சோதனையிட்டனர். அதன்பின் கோவிலின் அருகே கரடியை உயிருடன் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. கூண்டுக்குள் கரடி விரும்பி உண்ணும், அன்னாசி பழங்கள் வைத்து வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். பழத்தை உண்ப தற்காக கரடி வரும் போது கூண்டுக்குள் சிக்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News