உள்ளூர் செய்திகள்

காரைக்காலில் பரிதாபம் நிச்சயம் தாமதமானதால் இளம் பெண் தற்கொலை

Published On 2022-12-07 08:28 GMT   |   Update On 2022-12-07 08:28 GMT
உமா மகேஸ்வரி, வீட்டு பூஜை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

புதுச்சேரி:

காரைக்கால் அருகே நிரவி நாகத்தோப்பு தெருவைச்சேர்ந்தவர் கந்தவேல். கொத்தனார் வேலை செய்துவரும் இவரது 2-வது மகள் உமாமகேஸ்வரி(வயது21). இவர் காரைக்கால் அவ்வை யார் அரசு மகளிர் கல்லூரியில், பி.ஏ படித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். உமா மகேஸ்வ ரிக்கும், திருவாரூ ரில் உள்ள உறவினர் கலிய பெருமாள் மகன் சதீஷ் என்ப வருகும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

கந்தவேல், உறவினரிடம் திருமணம் குறித்து பேசியபோது, சதீஷ்க்கு மூத்தவர்கள் 2 பேர் இருப்பதால் சதீஷ்க்கு திருமணம் செய்துவைக்க யோசித்தனர். பிறகு, கந்தவேல், தனது மூத்த மகன் இதேபோல் காதல் விசயத்தில் இருந்தபோது, பெண் வீட்டார் சம்மதிக்காத காரணத்தால், தற்கொலை செய்துகொண்டார்.

இருப்பது ஒரே மகள் என கூறியதை அடுத்து, சதீஷ் வீட்டார் கடந்த நவம்பர் 30ந் தேதி கந்தவேல் வீட்டுக்கு சென்று, திருமணம் குறித்து பேசி முடிவெடுத்து, விரைவில் நிச்சயார்த்த தேதி சொல்வதாக கூறி சென்றதாக கூறப்படுகிறது.

மறுநாள் சதீஷ் உமா மகேஸ்வரி ஆகியோர் செல்போனில் பேசியதா கவும், அதன் பிறகு இருவரும் பேசவில்லையென கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3ந் தேதி கந்தவேலின் மனைவி உஷா, விரைவில் நிச்சயதார்த்த தேதி சொல்வதாக கூறினா ர்கள் யாரும் போன் செய்யவில்லை. நீயாவது போன் செய் என மகளிடம் செல்போனை கொடுத்த போது, உமாமகேஸ்வரி போனில் ேபசாமல், போனை உடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பகல் 1.30 மணி அளவில், சதீஷ் சகோதரர் கந்தவேலுக்கு போன் செய்து, டிசம்பர் 7ந் தேதி நிச்சயதார்த்தம் செய்துகொள்ளலாம் என்ற தகவலை கூறியுள்ளார். அன்று பிற்பகல் 3 மணி அளவில், உமா மகேஸ்வரி, வீட்டு பூஜை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, கந்தவேல், நிரவி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகி ன்றனர்.

Tags:    

Similar News