உள்ளூர் செய்திகள்

பா.ம.கவினர் 45 பேர் கோர்ட்டில் ஆஜரான காட்சி.

மறியல் போராட்ட வழக்கு அருள் எம்.எல்.ஏ உள்பட 45 பா.ம.கவினர் கோர்ட்டில் ஆஜர்

Published On 2023-01-31 15:25 IST   |   Update On 2023-01-31 15:25:00 IST
  • டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க.வினர் மரக்காணம் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு போராடும் பொழுது கைது செய்யப்பட்டனர்.
  • இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

சேலம்:

2013 -ம் ஆண்டு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க.வினர் மரக்காணம் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு போராடும் பொழுது கைது செய்யப்பட்டனர்.

அதை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் புதிய பஸ் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முக்கிய நிர்வாகிகள் அருள் எம்.எல்.ஏ, கதிர் ராசரத்தினம், சத்ரியசேகர், ஏ.கே.ஆறுமுகம், பகுதி செயலாளர் அண்ணாமலை, ராசமாணிக்கம் உள்பட 45 பேர் மறியலில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் மீதான இந்த வழக்கு விசாரணை சேலம் ஒருங்கிணைந் நீதிமன்றம் ஜெ.எம்-2 ல் நடந்து வருகிறது.வழக்கு விசாரணை ெதாடர்பாக கோர்ட்டில் இன்று 45 பேரும் ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவிடப்படது.

இதனை தொடர்ந்து இன்று அருள் எம்.எல்.ஏ. உள்பட 45 பேரும் வக்கீல் குலசேகரன் தலைமையில் ஆஜரானார்கள். இன்று நீதிபதி விடுமுறையில் உள்ளதால் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஆஜர் ஆக உத்தரவிட்டப்பட்டது.

Tags:    

Similar News