உள்ளூர் செய்திகள்

தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், பழனி நாடார் எம்.எல்.ஏ. மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலெக்டரிடம் மனு வழங்க சென்றபோது எடுத்தபடம்.




தென்காசி தெற்கு மாவட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்து மனு - தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலெக்டரிடம் வழங்கினார்

Published On 2022-10-27 14:01 IST   |   Update On 2022-10-27 14:01:00 IST
  • தென்காசி தெற்கு மாவட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த கோரிக்கை மனுவினை மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் வழங்கினர்.
  • கருப்பாநதி கால்வாய் தூர்வாறுதல், ஆர். நவநீதகிருஷ்ணபுரம் தீவு அலுவலகம் அமைத்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வழங்கப்பட்டது.

தென்காசி:

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், தென்காசி பழனி நாடார் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கவுன்சிலர்கள், யூனியன் சேர்மன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து தென்காசி தெற்கு மாவட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த கோரிக்கை மனுவினை மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் வழங்கினர்.

அதில் கருப்பாநதி கால்வாய் தூர்வாறுதல், ஆர். நவநீதகிருஷ்ணபுரம் தீவு அலுவலகம் அமைத்தல், கீழக்கலங்கல் ஊராட்சிக்கு கூடுதல் குடிநீர் வழங்குதல், பொது பயன்பாட்டிற்கு நீர் பிடிப்பு பகுதியை வழங்குதல், ஊத்துமலை ஊராட்சியில் புதிய தண்ணீர் தொட்டி வழங்குதல், ஆலங்குளம் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 16 ஊர்களுக்கு பகுதி நேர ரேஷன் கடை வழங்குதல், வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு திருஉருவச் சிலை எழுப்புதல், குற்றாலம் செண்பகா தேவி அருவிக்கு மேல் அணை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

அப்போது மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா, தென்காசி தி.மு.க. ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் ஷேக், அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேல், தொழிலதிபர் மணிகண்டன் மற்றும் ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் என பலர் உடன் இருந்தனர்.


Tags:    

Similar News