உள்ளூர் செய்திகள்

மத்திய குழுவிடம் மனு அளித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்.

மத்திய குழுவிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு

Published On 2022-10-16 10:18 GMT   |   Update On 2022-10-16 10:18 GMT
  • தொடர்ந்து பெய்யும் மழையால் நெல்லை காய வைக்க முடியவில்லை.
  • 22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்திட மத்திய அரசு அனுமதி வழங்கிட வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சையில் நேற்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பத அளவு தொடர்பாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் என்.வி.கண்ணன் மற்றும் நிர்வாகிகள் மத்திய குழுவினரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தற்போது தமிழகத்தில் பெய்து வரும் கனமழையாலும் காற்றின் ஈரப்பதம் கூடுதலாக உள்ளதாலும் அறுவடை செய்யப்படும் நெல் ஈரப்பதம் கூடுதலாக உள்ளது. அரசு 17 சதவீதம் ஈரப்பதம் நெல்லை மட்டுமே கொள்முதல் செய்கிறது. இதனால் நெல்லை விவசாயிகள் காய வைத்தும் தொடர்ந்து பெய்யும் மழையால் நெல்லை காய வைக்க முடியவில்லை.

இதனால் விவசாயிகளுக்கு பொருட் செலவு அதிகமாகிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு கோரியுள்ள 22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்திட மத்திய அரசு அனுமதி வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News