உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவன் 10-ம் வகுப்பு தேர்வில் சாதனை:கலெக்டர், அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் வாழ்த்து

Published On 2023-05-21 15:42 IST   |   Update On 2023-05-21 15:42:00 IST
  • பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், ஜீனூர் கிராமத்திற்கு சென்று, மாணவர் கீர்த்தி வர்மாவை பாராட்டி, தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார்.
  • முன்னாள் எம்எல்ஏ.செங்குட்டுவன், மாணவர் கீர்த்தி வர்மாவிற்கு ரூ.5 ஆயிரம் வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அடுத்த சோக்காடி கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி - அருள்மூர்த்தி தம்பதியினர் மகன் கீர்த்திவர்மா. இவருக்கு 4 வயது இருக்கும் வீட்டினங மாடியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, மாடியில் சென்ற மின்கம்பியை பிடித்ததில் இரு கைகளையும் இழந்தார்.

வேப்பனஹள்ளி ஒன்றியம் ஜீனூர் கிராமத்தில் தனது தாய் வீட்டிற்கு தனது மகன் கீர்த்திவர்மா கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கஸ்தூரி சென்று விட்டார். நெடுருதி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவர் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 437 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். மாணவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். மேலும் அவருக்கு தேவையான உயர்கல்வி படிப்பதற்கான உதவிகளையும், மருத்துவ உதவிகளையும் செய்து தருவதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிலையில் மாணவர் கீர்த்தி வர்மாவிற்கு தி.மு.க., அதிமுக எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நிதியுதவி வழங்கி வாழ்த்தினார்கள். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன், ஜீனூர் கிராமத்திற்கு சென்று, மாணவர் கீர்த்தி வர்மாவை பாராட்டி, தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார். அதே போல் கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் ரூ.5 ஆயிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், அன்பரசன், ஒன்றிய செயலாளர்கள் தனசேகரன், கோவிந்தன், நிர்வாகிகள் சங்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதே போல், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக துணை பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமி, மாணவர் கீர்த்தி வர்மா வீட்டிற்கு சென்று தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் வழங்கினார். அத்துடன் மேல்நிலை கல்வி பயில தேவையான உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்தார். இதே போல் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ., ரூ.5 ஆயிரம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் சைலேஷ் கிருஷ்ணன், ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதே போல் வேப்பனப்பள்ளி தொகுதி முன்னாள் எம்எல்ஏ., வும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளருமான முருகன், மாணவர் கீர்த்தி வர்மாவிற்கு ரூ.5 ஆயிரம் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது, ஒன்றிய செயலாளர் ரகுநாத், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் முருகேசன், சதாசிவம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் நரசிம்மன், தனம்ஜெயன், மாவட்ட பிரதிநிதி ரவி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராகவன், பழனி, கிளை செயலாளர் முனுசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதே போல் தி.மு.க. கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளரும், திமுக மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான செங்குட்டுவன், மாணவர் கீர்த்தி வர்மாவிற்கு ரூ.5 ஆயிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திமுக இளைஞரணி துணை செயலாளர் செந்தில்குமார், திமுக பிரதிநிதியும், தொழில் அதிபருமான கே.வி.எஸ்.சீனிவாசன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராஜன், காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவி அம்சவேணி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த இரு கைகளையும் இழந்த மாணவர் கீர்த்தி வர்மாவை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் சென்று சந்தித்து, இனிப்புகளை வழங்கி பாராட்டு தெரிவித்ததுடன், மாணவரிடம் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார்.

Tags:    

Similar News