உள்ளூர் செய்திகள்

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-08 12:35 IST   |   Update On 2023-03-08 12:35:00 IST
  • தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
  • அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்தது

பெரம்பலூர்

பெரம்பலூர் புறநகர் துறைமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். சென்னையில் போக்குவரத்து பணிமனைகளில் உள்ள ஏறத்தாழ ஆயிரம் அரசு பஸ்களை தனியார் வசம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்து இருப்பதை கைவிட வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். அவுட்சோர்சிங் முறையில் பணி வழங்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News