உள்ளூர் செய்திகள்
பெட்டி கடையில் ரூ.60 ஆயிரம் திருட்டு
- பெட்டி கடையில் ரூ.60 ஆயிரம் திருட்டு போனது.
- போலீசார் விசாரணை நடத்தி பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே செங்குணம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 39). இவர் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே பெட்டி கடை நடத்தி வருகிறார். கடந்த 23-ந் தேதி இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கடை உள்ளே கல்லாவில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.