உள்ளூர் செய்திகள்

ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க கலெக்டரிடம் மனு

Published On 2022-06-21 14:24 IST   |   Update On 2022-06-21 14:24:00 IST
  • ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க மனு அளித்தனர்.
  • பழுதடைந்துள்ள கடையை அகற்றிவிடவேண்டும்

பெரம்பலூர் :

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது பொதுமக்கள் அளித்த ஒரு மனுவில், குன்னம் தாலுகா, அத்தியூர் ஊராட்சி, புதுப்பேட்டை 1-வது வார்டில் பழுதடைந்துள்ள ரேஷன் கடையை அகற்றிவிட்டு, ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் வணிக தொடர்பாளர்களாக 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், எங்கள் பணியை தனியார் வசம் ஒப்படைப்பதாக தெரிகிறது. எங்கள் பணியை தனியார் வசம் ஒப்படைக்காமல் அந்த வங்கியே தொடர வேண்டும், என்று கூறியிருந்தனர்.

குன்னம் தாலுகா அத்தியூர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களான மலர்கொடி, லெட்சுமணன், சுதா, வெற்றி சக்தி, பழனிவேல் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், எங்கள் ஊராட்சியில் தலைவர் எந்த பணியும் மேற்கொள்ளவில்லை. நாங்கள் எங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தாலும், அதனை அவர் சரி செய்யவில்லை. எனவே இந்த மனுவை சமர்ப்பித்து ராஜினாமா செய்து கொள்கிறோம், என்று கூறியிருந்தனர்.

Tags:    

Similar News