உள்ளூர் செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
- இளைஞர்கள் மீது தாக்குதல் சம்பவம் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்
பெரம்பலூர்,
பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் அம்மா உணவகம் அருகில் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்ட த்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை வகித்தார். கடலூர் மாவட்டம், புவனகிரி ஒன்றியம், சாத்தப்பாடி கிராமத்தில் தலித் இளைஞர்களை தாக்கிய வர்களை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்து அவர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.