உள்ளூர் செய்திகள்
பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு
- வழி கேட்பது போல் பேசினர்
- பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி பறித்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன் மனைவி சம்பூரணம் (வயது 55). இவர் தனது வயலில் இருந்து கால்நடைகளை வீட்டுக்கு ஒட்டி வந்துகொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சம்பூரணத்திடம் வழி கேட்பது போல் பேச்சுக் கொடுத்து அவர் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து சம்பூரணம் மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.