உள்ளூர் செய்திகள்

வடக்கலூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

Published On 2023-04-20 06:20 GMT   |   Update On 2023-04-20 06:20 GMT
  • வடக்கலூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது
  • விவசாயிகள் தங்கள் பகுதியிலேயே தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்

அகரம்சீகூர்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியம் வடக்கு பகுதியில் உள்ள கிராமங்களில் பெரும்பாலும் நெல் சாகுபடியே அதிகமாக செய்யப்பட்டு அறுவடை நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்கள் பகுதியிலேயே தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதையடுத்து தமிழக அரசின் சார்பில் வடக்கலூர் கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன், கவுன்சிலர் செல்லம்மாள் மாயவேல், துணைத் தலைவர் கணேசன், முன்னாள் தலைவர் பிச்சமுத்து, நெல் கொள்முதல் கண்காணிப்பாளர் சையது முஸ்தபா, பட்டியல் எழுத்தர் அழகுதுரை, அகரம் காமராஜ், பழைய அரசமங்கலம் குருசாமி, கத்தாழை மேடு செல்வகுமார் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இதனால் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News