உள்ளூர் செய்திகள்

விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-11-10 15:02 IST   |   Update On 2022-11-10 15:02:00 IST
  • விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்
  • பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்றது

பெரம்பலூர்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவில் மாணவர்களுக்கான சாலையோர மிதிவண்டி, ஜூடோ, சிலம்பம் ஆகிய போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் போட்டியினை துவக்கி வைத்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சாலையோர மிதிவண்டி போட்டியில் பாடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 14 17 19 பிரிவில் முதலிடம் பெற்றனர். ஜூடோ போட்டியில் 14 வயது பிரிவில் பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களும், வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர், கொத்தவாசல் அரசு அரசு நடுநிலைப்பள்ளி மாணவர் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

19 வயது பிரிவில் லெப்பைக்குடிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். சிலப்பம் போட்டியில் ரெட்டையர் பிரிவில் அன்னமங்கலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். கம்பு சண்டை போட்டியில் உடும்பியம் ஈடன் கார்டன் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆகியோர் வெற்றி பெற்றனர். போட்டியின் ஏற்பாடுகளை லப்பைக்குடிகாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜம்மாள், உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News