உள்ளூர் செய்திகள்

குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

Published On 2022-07-29 14:38 IST   |   Update On 2022-07-29 14:38:00 IST
  • குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
  • வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று அளிக்க வேண்டும்

பெரம்பலூா் :

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள 2 ஆம் நிலைக் காவலா் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) 2 ஆம் நிலை சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பணியிடத்துக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள தொகுதி 1-க்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

ஆக. 3 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் தங்களது விவரங்களை வரும் 2-ந் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும்.

இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோா் பணியிடத்துக்கு விண்ணப்பித்த நகல், ஆதாா் அட்டை, புகைப்படங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று அளிக்க வேண்டும்.

Tags:    

Similar News