உள்ளூர் செய்திகள்

பெண் குழந்தைகள் விருதிற்கு விண்ணப்பிக்க அழைப்பு

Published On 2022-11-12 15:21 IST   |   Update On 2022-11-12 15:21:00 IST
  • பெண் குழந்தைகள் விருதிற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
  • கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய பெண் குழந்தைகள் விருதிற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய வீரதீர செயல் மற்றும் சாதனைகள் புரிந்த தகுதிகளுடைய பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசால் 2022-ம் ஆண்டிற்கு வழங்கப்படும் தேசிய பெண் குழந்தைகள் விருது வழங்கப்படவுள்ளது.

பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேரு எதாவது வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள் மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் என சேவைகளை செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடையவர்கள் உரிய விபரங்களுடன் வரும் 30ம்தேதி மாலை 5.30 மணிக்குள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News