உள்ளூர் செய்திகள்
பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க பா.ஜ.க. வலியுறுத்தல்
- பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க பா.ஜ.க.வினர் வலியுறுத்தினர்
- ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட பா.ஜ.க. விவசாய பரிவு சார்பில் பொங்கல் பரிசாக ரூ 5 ஆயிரம் மற்றம் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்த்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் குடும்ப அட்டைக்கு பொங்கல் பரிசாக தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் ரூ.5 ஆயிரம் ரொக்க பணமும், செங்கரும்பு, பனைவெல்லத்துடன் முந்திரிபருப்பு, ஏலக்காய், திராட்சை ஆகிவற்றை தரமானதாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் கலெக்டரிடம் மனு அளித்து கலைந்துசென்றனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்