மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம், மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்கிய காட்சி.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்ரூ.6.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், தலைமையில் இன்று நடைபெற்றது.
- மாற்றுத்திறனாளி களிடமிருந்து 18 மனுக்கள் வரப்பெற்றன.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலை வாய்ப்பு, வங்கிக் கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்தி றனாளி களுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பல்வேறு மனுக்கள் வரப்பெற்றன. மேலும், மாற்றுத்திறனாளி களிடமிருந்து 18 மனுக்கள் வரப்பெற்றன.
இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2 நபர்களுக்கு தலா ரூ.83,500 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 5 நபர்களுக்கு தலா ரூ.6,880 மதிப்பிலான தையல் இயந்திரங்களும், 30 நபர்களுக்கு தலா ரூ.12,500 மதிப்பிலான செல்போன்க ளும், 5 நபர்களுக்கு தலா ரூ.7,500 மதிப்பிலான கால் தாங்கிகளும் என மொத்தம் 42 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
இக்கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்ட அனை த்துத்துறை அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.