உள்ளூர் செய்திகள்

பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

Published On 2023-02-04 06:48 GMT   |   Update On 2023-02-04 07:17 GMT
  • மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.
  • போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பல்லடம் :

பல்லடம் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த நிலையில் கோவை - திருச்சி .தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப முகூர்த்த நாள் என்பதால் கார், மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை,வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது. இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன.போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

Similar News