உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு கையேடுகளை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கிய காட்சி. அருகில் மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதி மற்றும் பலர் உள்ளனர்.

'ரத்த கொடையாளர்களுக்கு மக்கள் நன்றிக்கடன்பட்டுள்ளார்கள்' - கலெக்டர் கார்த்திகேயன் பேச்சு

Published On 2023-06-14 08:37 GMT   |   Update On 2023-06-14 08:37 GMT
  • ரத்த தானம் வழங்கிய 50 பேருக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கி கலெக்டர் கார்த்திகேயன் பாராட்டினார்.
  • உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.

நெல்லை:

நெல்லை அரசு மருத்துவமனையில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு இன்று மனிதச் சங்கலி நடைபெற்றது.

இதில் ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையேடுகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.

பாராட்டு நிகழ்ச்சி

தொடர்ந்து மருத்துவமனை வளாக கூட்ட அரங்கில் ஆண்டுக்கு 3 முறை ரத்த தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 125 முறை ரத்த தானம் வழங்கிய டவுன் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் உட்பட 50 பேருக்கு சான்றித ழும், கேடயமும் வழங்கி கலெக்டர் கார்த்திகேயன் பாராட்டினார்.

பின்னர் மருத்துவ மாணவ, மாணவிகள் உட்பட அனைவரும் ரத்த தானம் செய்வது தொடர் பாக உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-

ரத்த வங்கி துறை எனக்கு பிடித்த துறை. காரணம் நான் மருத்துவம் படிக்கும் போது ஆப்சனல் பாடமாக ரத்த வங்கி துறையைத்தான் தேர்வு செய்தேன். அரிதான ரத்த பிரிவுகள் உட்பட இன்றைக்கு ரத்தம் இல்லா மல் ஒரு உயிரிழப்புகள் நிகழாது என்ற நிலைக்கு தமிழ்நாடு வந்துள்ளது. அதற்கு காரணம் ரத்த கொடையாளர்கள் தான்.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை தேவைக்கு அதிகமாகவே ரத்தம் கிடைக்கிறது. அதுவும் ரத்த கொடையாளர்கள் மூலமாகவே கிடைக்கிறது. மகப்பேறு கால உயிரிழப்புகளை தடுப்பதில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா உள்ளது. அதிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது.

மகப்பேறு காலத்தில் தாய், சேய் என இருவரையும் காப்பாற்றுவதில் ரத்த கொடையாளர்களின் பங்கும் முக்கியமானது. சமூக அக்கறையுடன் பலர் ரத்த தானம் செய்ய முன்வருவதால் உயிரிழப்பு களை படிபடியாக குறைத்து வருகிறோம்.

இன்றைக்கு ரத்த தானம், கண் தானம் என வளர்ந்து இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடப்பதற்கு அடிப்படையே இந்த ரத்த தானம்தான். இதற்காக தமிழக மக்கள் ரத்ததான கொடையாளர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளா ர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது

நிகழ்ச்சியின் போது நெல்லை அரசு மருத்துவ மனையின் ரத்த வங்கி துறை தலைவர் டாக்டர் மணிமாலாவிற்கு கலெக்டர் கார்த்திகேயன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டினார்.

அப்போது டாக்டர் மணிமாலா பேசுகையில், நெல்லை அரசு மருத்துவ மனையில் கடந்த 22 ஆண்டுகளில் ரத்தம் இல்லாமல் ஒரு உயிரிழ ப்புகள் கூட நிகழவில்லை. கடந்த ஆண்டு 10 ஆயிரத்து 38 யூனிட் ரத்தம் தானமாக சேகரிக்கப்பட்டது. இதன் மூலம் 23 ஆயிரத்து 500 பேர் காப்பாற்றப்ப ட்டுள்ளனர் என்றார்.

நிகழ்ச்சியில் கல்லூரி உதவி முதல்வர் சுரேஷ் துரை, மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், நிலைய மருத்துவ அலுவலர் ஷியாம் சுந்தர் மற்றும் பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன், இணை இயக்குனர் (நலப்பணிகள்) லதா, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் அமலவளன், திட்ட மேற்பார்வையாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News