உள்ளூர் செய்திகள்

டவுன் பகுதியில் ஒரு கரும்புச்சாறு கடையில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் அலுவலகர்கள் ஆய்வு நடத்திய போது எடுத்த படம்.

நெல்லை டவுனில் தரமற்ற எலுமிச்சை பழங்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்

Published On 2023-05-15 14:46 IST   |   Update On 2023-05-15 14:46:00 IST
  • கரும்புச்சாறு உள்ளிட்ட பானங்களில் கெட்டுப்போன எலுமிச்சை பழங்களை பயன்படுத்துவதாக புகார் வந்தது.
  • 36 கடைகளில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

நெல்லை:

நெல்லையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இளநீர், கரும்புச்சாறு, கூழ், ஜூஸ் கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

கடைகளில் ஆய்வு

இந்நிலையில் மாநகர பகுதியில் கோடைக்காலங்களில் விற்பனை செய்யப்படும் ஜுஸ், கரும்புச்சாறு, சர்பத் கடைகளில் தரமற்ற எலுமிச்சை பழங்கள், கெட்டுப்போன எலுமிச்சை பழங்களை பயன்படுத்து வதாகவும், அழுக்கடைந்த ஐஸ் கட்டிகளை பயன்படுத்து கின்றனர் எனவும் பொதுமக்கள் சார்பாக சமூக ஆர்வலர்களும் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தியிடம் புகார் கூறி வந்தனர்.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி உதவி கமிஷனர் வெங்கட்ராமன் வழிகாட்டுதலின்படி இன்று நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையிலான குழுவினர் டவுன் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

சுமார் 81 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 36 கடைகளில் தரமற்ற பொருட்கள் பயன்ப டுத்தப்ப ட்டது கண்டு பிடிக்கப்பட்டு அதன் உரிமை யாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து அந்த கடைகளுக்கு ரூ.6,800 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த கடைகளில் அரசு உத்தரவை மீறி பயன்ப டுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகள் சுமார் 75 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News