உள்ளூர் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் பவித்ரோட்சவ திருவிழா-நாளை மறுநாள் நடக்கிறது

Published On 2023-08-27 09:13 GMT   |   Update On 2023-08-27 09:13 GMT
  • ஒரு வருட பூஜைகளின் பலன் கிடைக்குமாறு வேண்டி நடத்தப்படும் விழா பவித்ரோட்சவம் திருவிழா என்று அழைக்கப்படுகிறது.
  • இரவு 7 மணி அளவில் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் ஆகியோர் வெள்ளி ரிஷப வாகனத்தில் டவுன் 4 ரதவீதிகளிலும் வீதி உலா சென்று வருவார்கள்.

நெல்லை:

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டில் 12 மாதமும் திருவிழாக்கள் மிக சிறப்பாக நடைபெறும். இவ்வாறு நடைபெறும் விழாக்களில் எந்தவித குறைபாடுகள் இருந்தாலும் அதனை நீக்கி ஒரு வருட பூஜைகளின் பலன் கிடைக்குமாறு வேண்டி நடத்தப்படும் விழா பவித்ரோட்சவம் திருவிழா என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டும் பவித்ரோட்சவ திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடை பெற உள்ளது. அன்றைய தினம் இரவு 7 மணி அளவில் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் ஆகியோர் வெள்ளி ரிஷப வாகனத்தி லும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சுப்பிர மணியர் மர மயில் வாகனத்திலும் என பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி நெல்லையப்பர் டவுன் 4 ரதவீதிகளிலும் வீதி உலா சென்று வருவார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News