உள்ளூர் செய்திகள்

திருக்காட்டுப்பள்ளியில் கோவில் இடத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்

Published On 2023-02-08 09:57 GMT   |   Update On 2023-02-08 09:57 GMT
  • கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.
  • செலுத்தும் வாடகை தொகைக்கு பல சமயங்களில் ரசீது கொடுக்கப்பட்டுள்ளது.

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நடுப்படுகை கிராமத்தில் கண்டமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 20-க்கும் மேற்பட்ட ஏழை-எளிய மக்கள் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.

இதற்காக கோயில் நிர்வாகத்திற்கு வாடகை தொகையும் செலுத்தி வருகின்றனர். செலுத்தும் வாடகை தொகைக்கு பல சமயங்களில் ரசீது கொடுக்கப்பட்டுள்ளது.

பல சமயங்களில் ரசீது கொடுக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.

இந்த நிலையில் இங்கு குடியிருக்கும் வீடுகளுக்கு வீட்டு வாடகை தொகையை உயர்த்தி நிர்ணயித்திருப்பதாகவும், பலருக்கும் வாடகை நிலுவைத் தொகை குறைந்தபட்சம் ரூ5 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாகரூ 12 ஆயிரம் வரை இருப்பதாகவும் உடனடியாக கட்டவேண்டும் கோவில் நிர்வாகத்தின் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இந்த பகுதி மக்கள் இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளனர்.

கோவில் நிர்வாகத்தால் தற்போது சொல்லப்படும் நிலுவைத் தொகையை ரத்து செய்ய வேண்டும்.

வீடுகளுக்கான வாடகைத்தொகையை தற்போது குடியிருப்பவரிடம் கலந்து பேசி நிர்ணயம் செய்ய வேண்டும்.

50 ஆண்டுகளுக்குமேலாக குடியிருக்கும் தங்களுக்கு இதே இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை அளித்து நியாயமான பதில் வரும் என்று காத்துக் கொண்டுள்ளனர்.

மேலும் இதுகுறித்து முதல்-அமைச்சருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

Tags:    

Similar News