உள்ளூர் செய்திகள்

காட்சி மண்டபம் பகுதியில் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் பஸ் நிறுத்தத்தில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்ட போது எடுத்த படம்.

நெல்லை மாநகரப் பகுதியில் பொது இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றம்

Published On 2023-05-27 09:01 GMT   |   Update On 2023-05-27 09:01 GMT
  • நெல்லை மாநகரப் பகுதியில் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.
  • அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டது.

நெல்லை:

நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவின் பேரில் நெல்லை மாநகரப் பகுதியில் ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரிலும் உதவி கமிஷனர் வெங்கட்ராமன், நகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலும் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தீவிர தூய்மை பணி நடைபெற்றது.

அதன்படி டவுன் காட்சி மண்டபம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சி போஸ்டர்கள் கிழித்து சுத்தப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வழுக்கோடை சாலை, சேரன்மகாதேவி சாலை மற்றும் காட்சி மண்டபம் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டது.

இந்த பணியில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார் வையாளர் மனோஜ், பரப்புரை யாளர்கள் முத்துராஜ், ஷேக், மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்்.

Tags:    

Similar News