உள்ளூர் செய்திகள்
இலைகள் உதிர்ந்த மரத்தில் குவிந்த கிளிகள்
- இலை உதிர்காலம் என்பதால் மரங்களில் இலை உதிர்ந்து பட்டமரம் போல் காணப்பட்டு வருகிறது.
- பச்சைகிளிகளால் அந்த பட்ட மரம் துளிர்த்த இலைபோல காட்சியளித்து வருகிறது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சென்னப்பள்ளி ஊராட்சியை சேர்ந்தது மேடுபள்ளி கிராமம்.
இந்த கிராமத்தில் முகப்பில் உள்ள கோவில் அருகே வேப்பமரம் ஒன்று உள்ளது. தற்போது சூளகிரி சுற்றுவட்டாரத்தில் அதிக வெப்பம் நிலவுவதாலும், இலை உதிர்காலம் என்பதால் மரங்களில் இலை உதிர்ந்து பட்டமரம் போல் காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வேப்பமரத்தின் மீது இந்த கிராமத்தில் சுற்றி திரியும் ஏராளமான பச்சை கிளிகள் இலை உதிர்ந்த மரத்தின் கிளைகளில் அமர்ந்ததால் பச்சைகிளிகளால் அந்த பட்ட மரம் துளிர்த்த இலைபோல காட்சியளித்து வருகிறது.