உள்ளூர் செய்திகள்

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற பொது கணக்கு குழுவினர்கள்.

அரசு மருத்துவமனையில் சட்டபேரவை பொது கணக்கு குழுவினர்கள் ஆய்வு

Published On 2022-12-29 09:31 GMT   |   Update On 2022-12-29 09:31 GMT
  • மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்கு றையாக இருப்பதாக தலைமை மருத்துவர் தெரிவித்தார்.
  • அரசு மருத்துவமனையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் தமிழ்நாடு சட்ட பேரவை பொது கணக்குழு தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன், ஜவாஹிருல்லா ஆகியோர் ஆய்வு மேற்கொ ண்டனர்.

அப்பொழுது வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் விதைகள் மற்றும் உரக்கிடங்கை பார்வையிட்டு போதுமான கையிருப்பு உள்ளதா என அதிகாரிளிடம் கேட்டறிந்தனர்.

மேலும் 15 விவசாயிகளுக்கு தென்னங் கன்றுகளையும் இரு விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான், ஐந்து விவசாயிகளுக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் மூன்று விவசாயிகளுக்கு 200 கிலோ ஜிப்சம் நான்கு விவசாயிகளுக்கு 20 கிலோ பாசிப்பயிறு உளுந்து உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து சீர்காழி அரசு மருத்துவமனை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் அப்பொழுது சிடிஸ்கேன் மையத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் எனவும் சீர்காழி மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக தலைமை மருத்துவர் தெரிவித்தார்.

இதனை அடுத்து தொலைபேசியில் சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரம ணியனிடம் தொடர்பு கொண்டு சீர்காழி அரசு மருத்துவ மனையில் மருத்துவர்கள் குறைவாக இருப்பதாக கூறி கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா.முருகன், பன்னீர்செல்வம், ராஜ்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News