உள்ளூர் செய்திகள்

பனை மரத்தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் வழங்கிய போது எடுத்த படம்.

திருச்செந்தூரில் பனை மரத் தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்-வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தொடங்கி வைத்தார்

Published On 2022-07-26 14:43 IST   |   Update On 2022-07-26 14:43:00 IST
  • பனைமரத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து 60 வயது முடிந்து ஓய்வூதியம் பெற தகுதி பெற்ற 5 பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள் வழங்கினார்.
  • 1 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் காமராஜர் சாலையில் உள்ள ராஜ் மஹாலில் பனை மரத் தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது. முகாமில் கலந்து கொண்டவர்களை தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் முருகபிரசன்னா வரவேற்று பேசினார்.

எர்ணாவூர் நாராயணன்

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் பனை மரத் தொழி லாளர் கள் நலவாரிய உறுப்பி னர்கள் சேர்க்கும் முகாமை தொடங்கி வைத்தார்.

பின்னர் பனைமரத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து 60 வயது முடிந்து ஓய்வூதியம் பெற தகுதி பெற்ற 5 பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள் வழங்கினார். மேலும் கல்லூரிகளில் படித்துக்கொண்டே பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மாரிச்செல்வநாதன்(19), சாம்ராஜ்(18) ஆகிய 2 மாணவர்களை பாராட்டி கவுரவப்படுத்தினார்.

முகாமில், தொழிலாளர் துறை ஆய்வாளர் ஆறுமுகம், சமத்துவ மக்கள் கழக மாநில பொருளாளர் கண்ணன், மாநில துணை பொது செயலாளர் காமராசு நாடார், மாவட்ட செயலாளர் அற்புதராஜ், மாநில தொழிலாளர் சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில இலக்கிய அணி செயலாளர் அந்தோணிபிச்சை, ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார், சதீஷ், பாலாஜி, அந்தோணி ராஜ், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ரவிசேகர், தேசிய நாடார் சங்க பொது செயலாளர் விஜயகுமார், ஏஐடியுசி மாவட்ட பொது செயலாளர் கிருஷ்ணராஜ், பனைமர வாரிய உறுப்பினர்கள் பசுமை வளவன், ஆன்டோ பிரைட்டன், ஆசிரியர் செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்

தூத்துக்குடி

பின்னர் நேற்று மாலை எர்ணாவூர் நாராயணன் தூத்துக் குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பனைமரத் தொழிலாளர் வாரியத்தில 10 ஆயிரத்து 548 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்த வாரியம் செயல்படாமல் இருந்தது. பல தொழிலாளர்கள் வாரியத்தில் இணையாமல் உள்ளனர். அவர்களை வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லையில் 500 பேரும், திருச்செந்தூரில் 1000 பேரும் உறுப்பினராக சேர்ந்து உள்ளனர். 1 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மீன்பிடி தடைக் காலங் களில் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது போன்று பனை தொழி லாளர்களுக்கு நிவாரணம் வழங்கு வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

பனங்காட்டில் குடிசை அமைத்து தங்கி இருக்கும் தொழிலாளர்களுக்கு காங்கிரீட் வீடுகள் அமைப் பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ரவிசேகர், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட பொருளாளர் அருண்சுரேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அவர் தூத்துக்குடி பனை பொருள் கூட்டுறவு அங்காடியில் ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News