உள்ளூர் செய்திகள்

உடன்குடி சந்தையடியூர் நாராயண சுவாமி கோவிலில் பால் திருவிழா

Published On 2023-08-22 08:52 GMT   |   Update On 2023-08-22 08:52 GMT
  • விழா நாட்களில் அய்யா அன்ன வாகன பவனி, சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன.
  • முக்கிய நிகழ்ச்சியாக பால் வைத்தல், அய்யா அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் வானவேடிக்கை,மேளதாளத்துடன் பவனி நடந்தது.

உடன்குடி:

உடன்குடி சந்தையடியூரில் தாகம் தணிந்த பதி என்றழைக்கப்படும் நாராயணசுவாமி கோவிலில் ஆடி, ஆவணி மாத பால்முறை திருவிழா 6 நாட்கள் நடந்தது. தொடர்ந்து விழா நாட்களில் அய்யா அன்ன வாகன பவனியும், அய்யா நாக வாகனம், குதிரை வாகனம், கருடன், அனுமார் வாகனங்களில் பவனி வருதல், தர்மம் எடுத்தல், திருவிளக்கு வழிபாடு, உம்பான் தர்மம் வழங்கல், சந்தனக்குடம் பவனி, சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. முக்கிய நிகழ்ச்சியாக பால் வைத்தல், அய்யா அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் வானவேடிக்கை,மேள தாளத்துடன் பவனி நடந்தது. ஏராளமான மக்கள் சப்பரத்திற்கு சுருள் வைத்தனர். 6 நாள் நடந்த விழாவிலும் அன்பு கொடிமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊர்மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News