உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் நூலகம் திறக்கப்பட்டது.

அரசு பள்ளியில் நூலகம் திறப்பு

Published On 2023-07-25 09:18 GMT   |   Update On 2023-07-25 09:18 GMT
  • ரூ.3 லட்சம் மதிப்பில் புதிதாக நூலகம் கட்டப்பட்டது.
  • மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த கடிநெல்வயல் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

பள்ளியின் முன்னாள் மாணவர்கள், கிராமத்தினர் இணைந்து நடத்திய விழாவுக்கு, விழாக்குழு தலைவர் முடியப்பன் தலைமை தாங்கினார்.

ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜசேகரன், ஊராட்சி தலைவர் வைத்திலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அறிவொளி, மேலாண்மை க்குழு தலைவர் ஹேமா வைரவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிராமத்தினரால் ரூ.3 லட்சம் மதிப்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நூலகத்தை கோட்டாட்சியர் மதியழகன் முன்னிலையில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் சட்டப்பே ரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ, தாசில்தார் ஜெயசீலன், கல்வி அலுவர்கள் ராஜமாணிக்கம், விமலா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பையன், பங்குத்தந்தைகள் ஜான்கென்னடி, வின்சென்ட், தலைமையாசிரியர் சிவருகு நாதன், கலை, பண்பாட்டு பயிற்றுநர் அம்பிகாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

முன்னாள் ஊராட்சி தலைவர்கள் செல்லப்பன், ஜான்முத்து, மலர்விழி தமிழழகன், ஹெல ன்ஜான்முத்து, தனியார் நிறுவன மேலாளர் சுந்தரராஜன் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.முன்னதாக தலைமையா சி்ரியை வாணி அனைவ ரையும் வரவேற்றார்.

ஆசிரியை கலையரசி அறிக்கை வாசித்தார்.

முடிவில் ஆசிரியை ராஜாத்தி நன்றி கூறினார்.

விழாவில் பள்ளிக்கு நிலம் கொடுத்த குடும்பத்தினர், சிறப்பிடம் பிடித்த மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Tags:    

Similar News