உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்.

தஞ்சையில் நடைபெறும் நாய்கள் கண்காட்சிக்கு இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்- கலெக்டர் பேட்டி

Published On 2023-03-08 14:40 IST   |   Update On 2023-03-08 14:40:00 IST
  • 2 வயதுக்கு மேற்பட்ட நாய்கள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கபடும்.
  • பல்வேறு வகையான நாய்கள் உள்ளன, அவற்றை தெரிந்து வைத்துக்கொள்ளவே இந்த கண்காட்சி.

தஞ்சாவூர்:

தஞ்சை மாதாக்கோட்டை மிருகவதை தடுப்பு சங்க அலுவலகத்தில் (எஸ்.பி.சி.ஏ) இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது ;-

மிருகவதை தடுப்பு சங்கத்துக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டு மிருகவதை தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் முறையாக நாய்கள் கண்காட்சி நடத்த வேண்டும் என்று எஸ்.பி.சி.ஏ உறுப்பினர்களால் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) எஸ்.பி.சி.ஏ. வளாகத்தில் நாய்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.

காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறும்.

பல்வேறு தரப்பினர், நிறுவனங்கள் கண்காட்சி நடைபெற உறுதுணையாக இருந்தனர்.

அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

கண்காட்சியில் 3 பிரிவுகளாக போட்டி நடைபெறும்.

அதாவது 1 வயது வரை உள்ள நாய்கள் , 1 முதல் 2 வயது வரையுள்ள நாய்கள், 2 வயதுக்கு மேற்பட்ட நாய்கள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கபடும்.

இதில் நாய்களின் அணிவகுப்பு, பராமரிப்பு முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெளிவுப்படுத்துவார்கள்.

செல்ல பிராணிகள் மீது குழந்தைகளுக்கு ஈர்ப்பு வர வேண்டும்.

மிருகம் வதைக்கபடுவதோ அல்லது கடினமான சூழ்நிலைக்கு உட்படுத்த படுவதோ செய்யக்கூடாது என்ற எண்ணம் சிறு வயதிலே வர வேண்டும்.

பல்வேறு வகையான நாய்கள் உள்ளன.

அவற்றை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாய்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது.

ஏராளமான நாய்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதில் கலந்த கொள்ள நாய்களின் உரிமையாளர்கள் என்ற இணையதளத்திலோ அல்லது 7418364555 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

வருகிற 10-ந் தேதி மாலைக்குள் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு கட்டணம் ரூ.250 மட்டுமே ஆகும். இதில் நாய்களுக்கு தடுப்பூசி, உணவு ஆகியவையும் அடங்கும்.

கண்காட்சியை பார்த்து ரசிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். அனைவரும் கண்காட்சியை பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News