உள்ளூர் செய்திகள்

ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி; யார் அவர்?

Published On 2023-08-06 15:44 IST   |   Update On 2023-08-06 15:44:00 IST
  • மயிலாடுதுறை- திருச்சி ரெயில் மோதி பலத்த காயம் அடைந்தார்.
  • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் திட்டை ரெயில் நிலையத்துக்கும், பசுபதிகோ யில் ரெயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளம் அருகே 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மயிலாடுதுறை- திருச்சி ரெயில் மோதி பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அதே ரெயிலில் ஏற்றி தஞ்சைக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் வழியிலேயே அந்த நபர் இறந்து விட்டார்.

இதையடுத்து தஞ்சை ரெயில்வே இருப்புபாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், தலைமை காவலர் சரவணசெல்வன் மற்றும் போலீசார் இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் அடிப்பட்டு இறந்தவர் யார் ? எந்த ஊர் ? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவர் பற்றிய தகவல் தெரிந்தால் உடனே 04362-230004 மற்றும் 9498101980 என்ற எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று இருப்பு பாதை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News