உள்ளூர் செய்திகள்

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு த.மு.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-12-06 10:13 GMT   |   Update On 2023-12-06 10:13 GMT
  • பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தருமபுரி,டிச.6-

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்ட த.மு.மு.க. சார்பில் இன்று பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுபேதார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஜனாப் ஹமீது, தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, இக்பால், மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், சி.பி.ஐ.எம் மாவட்ட செயலாளர் குமார், சமூக நல்லிணக்க மேடை இணை ஒருங்கிணைப்பாளர் பொ.மு. நந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் த.கு. பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 450 ஆண்டுகால வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதி டிசம்பர் 6. 1992 அன்று பயங்கரவாத கும்பலால் பட்டம் பகலில் இடித்து தள்ளப்பட்டது. அந்த நாளை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடைப்பிடித்து வருவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News