உள்ளூர் செய்திகள்
சூளகிரி பேருந்து நிலையம் முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் பன்றிகள் மேய்வதை படத்தில் காணலாம்.
சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி கடக்கும் பன்றிகள்-அச்சத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்
- சாலை ஒரமாக வளர்ப்பு பன்றிகளை வளர்த்து வருகின்றனர்.
- பன்றிகளை வளர்க்க தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சூளகிரி பேருந்து நிலையம் முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலை யில் கிருஷ்ணகிரி-ஒசூர் சர்வீஸ் சாலை ஒரமாக வளர்ப்பு பன்றிகளை வளர்த்து வருகின்றனர்.
இந்த பன்றிகள் சாலைகளை கடந்து சூளகிரி பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவு நீர் குட்டைக்கு வந்து அங்கு உள்ள கழிவுகளை சாப்பிட்டுவிட்டு சாலைகளில் அங்கும், இங்கும் திரிவதால் வாகன ஓட்டிகள் பீதியில் வாகனங்களை இயக்கி வருகின்றனர் .
இரவு நேரங்களில் திடீரென சாலையில் ஒடுவதால் வாகன ஓட்டிளுக்கு விபத்து எற்படும் அபாயம் உள்ளது. அதனால் பொதுமக்கள் பன்றிகளை வளர்க்க தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.