உள்ளூர் செய்திகள்

விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்

Published On 2022-10-22 15:08 IST   |   Update On 2022-10-22 15:08:00 IST
  • தகரடப்பகளில் மூடி வைத்து பட்டாசுகளை வெடிக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது .
  • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விபத்தில்லா திபாவளி கொண்டாடுவது குறித்து ராயக்கோட்டை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பி.என்.அனில்குமார் தலைமையில் தீயணைப்பு படையினர் திபாவளி அன்று பட்டாசுகளை வெடிக்கும்போது பெற்றோர்கள் துணையுடன் வெடிக்க வேண்டும்.

தீ காயம் ஏற்பட்டால் எவ்வாறு முதல் உதவி செய்ய வேண்டும் என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் சமையல் அறையில் பட்டாசுவைக்க கூடாது கண்ணாடி பாட்டல்கள், தகரடப்பகளில் மூடி வைத்து பட்டாசுகளை வெடிக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது .

மேலும் ராயக்கோட்டை முக்கிய பகுதியில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

Tags:    

Similar News