உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியினை சபாநாயகர் அப்பாவு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த காட்சி. அருகில் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் மற்றும் பலர் உள்ளனர்.

மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி

Published On 2023-04-29 08:51 GMT   |   Update On 2023-04-29 08:51 GMT
  • தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி பாளையில் நடைபெற்றது.
  • பேச்சுப் போட்டி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 5 தலைப்புகளில் நடத்தப்பட்டது.

நெல்லை:

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி பளையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

தலை நிமிரும் தமிழகம் என்பதற்கு வலு சேர்க்கும் வகையில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இந்த பேச்சுப் போட்டி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 5 தலைப்புகளில் நடத்த ப்பட்டது. இதில் திரளான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மரியதாஸ் முன்னி லை வகித்தார். சிறுபான்மை யினர் நல ஆணையத்தின் மாவட்ட ஒருங்கி ணைப்பா ளரும், முன்னாள் எம்.பி.யுமான விஜிலா சத்யானந்த் வரவேற்றார். அப்துல்வகாப் எம். எல்.ஏ., மேயர் சரவணன், மாவட்ட பஞ்சா யத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறுபான்மையினர் ஆணைய மாநில ஒருங்கி ணைப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான அழகிரிசாமி நோக்க உரையா ற்றினார். முடிவில் நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர் அந்தோணி செல்வராஜ் நன்றி கூறினார்.

மாவட்ட அளவில் நடை பெறும் இந்த பேச்சு போட்டியில் வெற்றி பெறும் மாணவ -மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கு வார்.

பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மகளிருக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் மகளிரு க்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பாளையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். இதில் அப்துல் வஹாப் எம். எல். ஏ., மேயர் சரவணன், துணை மேயர் ராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமானது கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உருவாகி வரும் ஒரு சோலார் நிறுவனத்தின் வேலை வாய்ப்புகளுக்காக நடத்தப்பட்டது. இந்த நிறுவனம் மூலம் 1600-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த வேலை வாய்ப்பு முகாமுக்கு 1,536 பேர் பதிவு செய்திருந்தனர். 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்ட 10,12-ஆம் வகுப்பு, பாலி டெக்னிக், பட்டப்படிப்பு மற்றும் என்ஜினீயரிங் ஆகிய துறைகளை சேர்ந்த பட்டம் பெற்ற அல்லது இறுதி ஆண்டு மாணவிகள் இதில் பங்கேற்றனர்.

இதில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட நெல்லை மாவட்டத்தை சேர்ந்த படித்த மகளிர்கள் கலந்து கொண்டனர். தேர்ந்தெடு க்கப்பட்ட மகளிர்கள் அடுத்த 6 - 10 மாதங்களில் படிப்படியாக பணியில் சேர்த்துக் கொள்ளப்படு வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News