உள்ளூர் செய்திகள்

மரக்கன்று நடவு செய்த ேபாது எடுத்தபடம்.

சிறப்பு காவல் படை சார்பில் பசுமை இயக்க விழிப்புணர்வு பேரணி

Published On 2023-05-05 15:16 IST   |   Update On 2023-05-05 15:16:00 IST
  • தமிழக அரசு காவல்துறை சார்பில் தமிழ்நாடு பசுமை இயக்கம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை சார்பாக தமிழக அரசு காவல்துறை சார்பில் தமிழ்நாடு பசுமை இயக்கம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படை பாண்டியராஜன் தலைமை தாங்கினார். களர்பதி ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் அணிவகுப்புடன் சென்று பொதுமக்களுக்கு மரக்கன்று கன்றுகள் வழங்கி மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது உதவி தளவாய் ராஜா உடன் இருந்தார்.

Tags:    

Similar News