உள்ளூர் செய்திகள்
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழைய வாகனம் ஏலம்
- வாகன ஏலத்தில் 16 பேர் டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரம் கட்டி கலந்து கொண்டனர்.
- ஏலத்தில் ஆரம்ப தொகை ரூ.64,750-ல் இருந்து நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கழிவு நீக்கம் செய்யப்பட்ட பழைய டாட்டா ஸ்பாசியா கோல்டு 4 சக்கர வாகனம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் யூனியன் சேர்மன் ஜனகர் தலைமையில் ஏலம் விடப்பட்டது.
வாகன ஏலத்தில் 16 பேர் டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரம் கட்டி ஏலத்தில் கலந்து கொண்டனர். ஏலத்தில் ஆரம்ப தொகை ரூ.64,750-ல் இருந்து நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது. இறுதியில் அதிகபட்ச தொகையாக ரூ.65,050-க்கு ஏலம் விடப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாக்கியம் லீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், ஓன்றிய பொறியாளர் வெள்ளைபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.