உள்ளூர் செய்திகள்

ஐ.வி.டி.பி. சுயஉதவிக்குழு விதவை குழந்தைகளுக்கு உதவித்தொகையை ஐ.வி.டி.பி. நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

ஐ.வி.டி.பி மகளிர் சுயஉதவிக்குழுவின் விதவை உறுப்பினர்களின் 260 குழந்தைகளுக்கு ரூ.26 லட்சம் கல்வி உதவித்தொகை -ஐ.வி.டி.பி நிறுவனர் வழங்கினார்

Published On 2022-12-06 14:21 IST   |   Update On 2022-12-06 14:21:00 IST
  • கல்வி வளர்ச்சியிலும் ஈடுபாட்டுடன் செயல்ப டுவது குறிப்பிடத்தக்கது.
  • ரூ.2.4 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி,

ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் மகளிர் சுயஉத விக்குழு உறுப்பினர்களின் மேம்பாடு மட்டுமன்றி உறுப்பினர் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியிலும் ஈடுபாட்டுடன் செயல்ப டுவது குறிப்பிடத்தக்கது.

அவற்றுள் ஒன்று விதவை உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம். ஐ.வி.டி.பி. உறுப்பினர்களில் கணவரை இழந்து மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் உறுப்பினர்களுக்காக இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

உறுப்பினர்களின் 260 அந்த வகையில் 4-ந்தேதி நடைபெற்ற உதவித்தொகை வழங்கும் விழாவில் ஐ.வி.டி.பி. சுயஉதவிக்குழு விதவை குழந்தைகளுக்கு தலா.ரூ.10,000 என மொத்தம் ரூ.26 லட்சம் உதவித்தொகையை ஐ.வி.டி.பி. நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

இக்கல்வி உதவித் தொகையை வழங்கி பேசிய ஐ.வி.டி.பி. நிறுவனத் தலைவர் இத்திட்டத்தில் பயன் பெறும் மாணவர்கள் நன்றாக படிப்பதுடன், தனது எண்ணத்தாலும், செய ல்களாலும் இரக்கமுள்ள வர்களாக திகழ்ந்து ஏழை எளியோர்க்கு உதவ முன் வருதல் வேண்டும்.

அதை உணர்த்துவ தற்காகவே இந்த கல்வி உதவித்தொகை திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.2.4 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சுண்டம்பட்டி அந்தோணி யார் ஆலய பங்குத்தந்தை ஜார்ஜ் , கிருஷ்ணகிரி மாவட்ட ஒய்வு பெற்ற முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News