உள்ளூர் செய்திகள்

நெல்லை நீதிமன்றம் முன்பு சாலையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம். 

சட்டங்களின் பெயர் இந்தியில் மாற்றத்திற்கு எதிர்ப்பு- நெல்லையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-23 09:07 GMT   |   Update On 2023-08-23 09:07 GMT
  • நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற பணியை புறக்கணித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • வக்கீல்கள் சங்கத்தினர் உள்ளிட்ட யாரையும் கலந்து ஆலோசிக்காமல் 3 முக்கிய சட்டங்களின் பெயர்களையும் மாற்றியுள்ளது.

நெல்லை:

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியவியல் சட்டம் ஆகிய 3 சட்டங்களின் பெயரை இந்தி, சமஸ்கிருத மொழியில் மத்திய அரசு பெயர் மாற்றம் செய்வதற்கு மசோதாவை தாக்கல் செய்துள்ளது.

இதனை எதிர்த்து நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற பணியை புறக்கணித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை மாவட்ட நீதிமன்றம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஷ்வரன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார்.

இதில் கலந்துகொண்ட வக்கீல்கள் கூறுகையில், மத்திய அரசு சட்டவியல் நிபுணர்கள், பார் கவுன்சில்கள், உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வக்கீல்கள் சங்கத்தினர் உள்ளிட்ட யாரையும் கலந்து ஆலோசிக்காமல் 3 முக்கிய சட்டங்களின் பெயர்களையும் மாற்றியுள்ளது.

இதனை கண்டித்து இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இது வக்கீல்களின் தொழில் முறைக்கு எதிரானது என்று கூறி அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதில் வக்கீல்கள் சுதர்சன், செந்தில்குமார், ஜாபர் அலி, பிரபாகரன் மற்றும் வக்கீல் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News