உள்ளூர் செய்திகள்
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள் போராட்டம் செய்த காட்சி.
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் பள்ளி மாணவனுக்கு விஷம் கொடுக்கப்பட்ட நிலையில் சேர்க்கப்பட்ட பொழுது, முறையான சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜி ஆகியவரை புதுச்சேரி முதலமைச்சர் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தியும், மருத்துவர்கள் மற்றும் ஊழியரிடம் முறை யான விசாரணை நடத்த வலியுறுத்தியும் காரைக்காலில் இன்று காலை அரசு பொது மரு த்துவமனை மருத்துவர்கள் . செவிலியர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.