உள்ளூர் செய்திகள்

மழையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிதவிக்கும் வாகனங்களை படத்தில் காணலாம்.

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published On 2023-07-11 10:03 IST   |   Update On 2023-07-11 10:03:00 IST
  • 2 மணி நேரமாக பெய்த கன மழையால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பணியாட்கள், சுற்றுலா பயணிகள் என பலரும் அவதியடைந்தனர்.
  • வாகன ஓட்டிகள் வெளிச்சம் இல்லாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் சூழலும் உருவானது.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வந்தது.காலையில் மாணவ- மாணவிகள், பள்ளி, கல்லூரி செல்லும் நேரங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் வரை அவ்வப்போது சாரல் மழை, மிதமான மழை பெய்து வந்த நிலையில் 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

நேற்று மதியம் திடீரென பெய்த சாரல் மழை, கன மழையாக மாறியது. சுமார் 2 மணி நேரமாக பெய்த கன மழையால் மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவ- மாணவிகள், அன்றாட பணிகளுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பணியாட்கள், சுற்றுலா பயணிகள் என பலரும் அவதியடைந்தனர்.

ஒரு சில வாகன ஓட்டிகள் வெளிச்சம் இல்லாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் சூழலும் உருவானது. மேலும் நள்ளிரவு வரை மழை கொட்டித் தீர்த்தது.நேற்றைய திடீர் மழையால் கொடைக்கானல் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுலாப்பணிகள் பாதிப்படைந்தனர்.

மழையால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News