உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-11 07:13 GMT   |   Update On 2023-07-11 07:13 GMT
  • தேர்தல் வாக்குறுதி 313-ன் படி முறையான சிறப்பு பென்சன் வழங்கவேண்டும்.
  • உண்ணாவிரதம் கூட்ட அமர்வில் ஒப்புக்கொண்ட மருத்துவ காப்பீடு ஈமச்சடங்கு நிதி ரூ.25000 வழங்க வேண்டும்.

தருமபுரி, 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட துணைத்தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் மாநில துணைத்தலைவர் கணேசன், மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் மதலைமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் காவேரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் குப்புசாமி, அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், நிர்வாகி கேசவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

தேர்தல் வாக்குறுதி 313-ன் படி முறையான சிறப்பு பென்சன் வழங்கவேண்டும். உண்ணாவிரதம் கூட்ட அமர்வில் ஒப்புக்கொண்ட மருத்துவ காப்பீடு ஈமச்சடங்கு நிதி ரூ.25000 வழங்க வேண்டும். சமூகநல முன்னாள் இயக்குநர் ஆப்பிரகாம் உத்தரவுபடி ஓய்வுகால பலன்களை ஓய்வுபெறும் அன்றே முழுமையாக வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags:    

Similar News